மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்று மத்திய மாகாண ஆளுநர் பணிமனையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தின் போது மத்திய மாகாணத்தில் கொரானா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவது தொடர்பான நிகழ்ச்சி திட்டம், மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் தற்போதைய நிலைமை போன்ற விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான சி.பி.ரத்நாயக்க, கேஹலிய
ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, சுகாதார அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.