மத்திய மாகாண கல்வி சேவையாளர்களின் சனச பணிப்பாளர் சபைக்கு மூன்றாவது முறையாகவும் ஒரு தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மேற்படி சங்கத்தின் பணிப்பாளர் தெரிவு நேற்று (24) கண்டி தருன பௌத்த மண்டபத்தில் காலை 8.30 மணி; முதல் பிற்பகல் இரண்டு மணி வரை நடைபெற்றது.
இதன் போது நுவரெலியா மாவட்டத்தில் போட்டி யிட்ட ஹட்டன் கல்வி வலயத்தை சேர்ந்த டிக்கோயா நுண்கலை கல்லூரியில் ஆசிரியர் க.சுந்தரலிங்கம் இவருடன் போட்டியிட்ட இரண்டு தமிழர்களில் 47 மேலதிக வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வருடத்திற்கு ஒரு முறை மத்திய மாகாணத்தில் உள்ள 15 கல்வி வலயங்களிலுமிருந்து மகா சபைக்கு 106 பேர் தெரிவு செய்யப்பட்டு அந்த 106 பேரிலிருந்தே பணிப்பாளர் சபை தெரிவு செய்யப்படும்.
குறித்த தேர்தலில் பணிப்பாளர் சபைக்காக 11 பேர் தெரிவு செய்யப்படும் இதில் 18 – 35 வயதுடைய இருவரும், மாவட்ட அடிப்படையில் மாத்தளை கண்டி,நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு மூவரும்,ஓய்வூதிய அங்கத்துவத்தில் ஒருவரும்,பொதுவாக ஐந்து பேரும் தெரிவு செய்யப்படுகின்றன.
இதன் போது சணச சங்கத்தின் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் வை.எம்,எச்.பண்டார அவர்களும்,உப தலைவராக பதில் கடமையாற்றி அதிபர் கபில பியந்த அவர்களும்,செயலாளராக அதன் ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னாள் செயலாளருமான சமரவீர அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மகா சபை அங்கத்தவர்களை தெர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த மாதம் 25 ம் திகதி நடை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்