மத்திய மாகாண கல்வி தரப்படுத்தல் வரிசையில் ஹட்டன் கல்வி வலயம் இரண்டாம் இடம்.

0
267

நடந்து முடிந்த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்தில் குறிப்பிட்ட பாடங்களைக் கொண்டு 15 கல்வி வலயங்களையும் தரவரிசைப்படுத்தியுள்ளன இதற்கமைய ஹட்டன் கல்வி வலயம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளதாக ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

குறித்த தரவரிசைப்படுத்தலுக்கமைய வில்கமுவ கல்வி வலயம் கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு 272 மாணவர்கள் விண்ணப்பம் செய்து அதில் 03 பாடங்களில் 196 மாணவர்கள் சித்திபெற்று 70.96 சதவீதத்தினை பெற்று முதலாம் இடத்தினை பெற்றுள்ளளது.

ஹட்டன் கல்வி வலயம் கடந்த உயர்தரப்பரீட்சையில் 1712 மாணவர்கள் விண்ணப்பித்து அதில் 03 பாடங்களில் 1133 பேர் சித்தி பெற்று 66.18 சதவீதத்தினை பெற்று இரண்டாம் இடத்தினையும், வலப்பனை கல்வி வலயம் 683 மாணவர்கள் உயர்தரப்பரீட்சைக்கு விண்ணப்பித்து 447 பேர் மூன்று பாடங்களில் சித்தி பெற்று 65.45 சதவீதத்தினை பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

ஏனைய கல்வி வலயங்கள் கண்டி 04, மாத்தளை 05, நுவரெலியா 06, நாவுல 07, கொத்மலை 08, தெனுவர 09, கம்பளை 10, கலேவெல 11, வத்தேகம 12, தெல்தெனிய 13, ஹங்குரங்கெத்த 14, கட்டுகஸ்தோட்டை 15, ஆகிய இடங்ளை முறையே பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த தரப்படுத்தலில் உயிரியல் விஞ்ஞனத்தில் கண்டி முதலாம் இடத்தினையும் ஹட்டன் இரண்டாம் இடத்தினையும் மாத்தளை மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன. உயிரியல் விஞ்ஞானத்தில் கண்டி, முதலாம் இடத்தனையும் வலப்பனை இரண்டாம் இடத்தினையும் ஹட்டன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன. கலைப்பிரிவில் முதலாம் இடத்தனை வில்கமுவ கல்வி வலயமும், இரண்டாம் இடத்தனையுயும் மூன்று ஆகிய இடங்களை நுவரெலியா மற்றும் நாவுல ஆகிய கல்வி வலயங்கள் பெற்றுள்ளன. வர்த்தக துறையில் கண்டி முதலாம் இடத்தனையும் ஹட்டன் இரண்டாம் இடத்தினையும் நுவரெலியா மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளதுடன் பொறியியல் தொழிநுட்பத்தில் மாத்தளை முதலாம் இடத்தினையும், ஹட்டன் இடத்தினையும். கண்டி மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன. உயிரியல் தொழிநுட்ப பாடத்தில் மாத்தளை முதலாம் இடத்தினையும் வில்கமுவ இரண்டாம் இடத்தினையும் ஹட்டன் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here