மத்திய மாகாணத்தின் பதில் முதலமைச்சராக விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்கள் மத்திய மாகாணத்தின் ஆளுனர் பி.பி.திஸாநியக்கக் அவர்களின் முன்னிலையில் மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக உத்தியோகபூர்வமாக 25.9.2018 செவ்வாய்கிழமை சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டார் .
இந் நிகழ்வுகள் ஆளுனரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தித்தில் இடம் பெற்றது.இதன்போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், இ.தொ.காவின் பொதுச் செயலார் அனுஷியா சிவராஜா,உதவிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்