தலவாக்கலை பெருந்தோட்டத்திற்கு சொந்தமான 12 தோட்டங்களைச் சேர்ந்த 04 மாத மனிதவள அபிவிருத்தி கற்கை நெறி பயிற்சி பெற்ற 45 சேம நல உத்தியோகத்தர்களுக்கு 06.09.2017 அன்று நானுஓயா ரதல்ல விளையாட்டு கழக மண்டபத்தில் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் களனிவெளி மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் இராஜதுரை, பிரதம நிறைவேற்று அதிகாரி டீ. செனவிரத்த, பொது முகாமையாளர சேனக அலவத்த, மனிதவள முகாமையாளர் சங்கீதா தர்கா, மனிதவள முகாமையாளர் ராம்;, என் ஐ பி எம் உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட முகாமையாளர்கள், உதவி முகாமையாளர்கள், தோட்ட வைத்தியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
டீ. சந்ரு