இன்றைய தினம் மலையகம் முழுவதும் போராட்ட களமாக மாறியது.ஆனால் பிரச்சனைகளற்ற இடையூறு அற்ற போராட்டமாக காணப்பட்டது.அந்தந்த பிரதேச வட்டார உறுப்பினர்கள் முன்னின்று போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.அந்தவரிசையில் டன்சினன் பகுதியிலும் மனித சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் ரஜினிகாந்த் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இப்போராட்டத்தில் டன்சினன் மேற்பிரிவு,கீழ்ப்பிரிவு,நடுப்பிரிவு,தொழிற்சாலை பிரிவு,அக்கரமலை என அனைத்து பிரதேச மக்ளும் கலந்துக்கொண்டனர்.
சுமார் சுமார் 5 மணிநேர போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்