மனைவியுடன் வாக்குவாதம்- 13 மாத குழந்தையை தூக்கியடித்த கணவர்!

0
241

பிரான்ஸில் குழந்தை மற்றும் மனைவி மீது தாக்குதல் நடத்திய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.Goussainville (val-d’Oise) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனைவியுடன் இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றின் முடிவில், 24 வயதுடைய ஒருவர் தனது மனைவியை தாக்கியுள்ளார். அத்தோடு 13 மாதங்கள் வயது கொண்ட கைக்குழந்தை ஒன்றையும் அவர் தாக்கியுள்ளார்.

மனைவி காவல்துறையினருக்கு அழைப்பு எடுத்துள்ளார். அதை அடுத்து, கணவர் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்திருந்த குழந்தையை மீட்டனர்.

🇫🇷பிரான்ஸ் தமிழர்கள் 18000 பேர் கொண்ட குழுவில் இணைய இங்கே அழுத்துங்கள்…
குழந்தை பாரிசின் Necker மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. தப்பி ஓடிய கணவரை அவரின் தொலைபேசி இருப்பிடத்தை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் கைது செய்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here