இந்தியாவின் திருவண்ணாமலை மாவட்டம், கோபுரத்தெரு பகுதியைச் சேர்ந்த கோபிக்கும் சரண்யா என்பவருக்கும் திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் தம்பதிக்கு இடையில் அடிக்கடி குடும்பப் பிரச்சினையின் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தீபாவளிக்கு முன்தினம் மறுபடியும் இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்படவே, திடீரென சரண்யா காணாமல் போயுள்ளார்.தாய் குறித்து தகப்பனிடம் பிள்ளைகள் வினவியபோது, அவர் கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இவ்வாறிருக்க கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சரண்யாவைக் காணவில்லை என கோபி தரப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.சரண்யாவின் பெற்றோருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
பொலிஸார் விசாரணைக்காக வீட்டுக்கு வருவதைக் கண்ட கோபி அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
பின் கோபியின் தாயிடம் விசாரிக்கப்பட்டது. ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறிவிட்டு, பின் சரண்யாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து காட்டுப் பகுதியில் வீசியதாகத் தெரிவித்துள்ளார்.பொலிஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த கோபி கைது செய்யப்பட்டார்.
பின் கோபியை அழைத்துக்கொண்டு குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்று சரண்யாவின் உடல் வீசப்பட்ட இடத்துக்கு சென்றுள்ளனர்.அங்கே சரண்யாவின் உடல் 8 துண்டுகளாக வெட்டப்பட்டு சூட்கேஸில் கவரில் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.