மனைவி வெளிநாட்டில்… கணவன் உட்பட இருவரின் மோசமான செயல்! நீதிமன்றம் விடுத்த உத்தரவு

0
66

நுவரெலியாவில் பல இடங்களில் பணம் , நகை உட்பட பெருமளவிலான இலத்திரனியல் உபகரணங்களையும் கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் இருவரை பொலிஸார் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் இவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொருவர் 29 வயதுடையவர் எனவும் குறித்த சந்தேகநபர் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும் இறுதியில் வலப்பனை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் பல முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடைசியாக கடந்த ஒகஸ்ட் 13-08-2024 ம் திகதி இரவு நுவரெலியா லபுக்கலை குடாஒயா பகுதியில் உள்ள வீடொன்றில் ஜன்னலை உடைத்து உள்நுழைந்த இவ்விரு திருடர்களும் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பணப்பையில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இருப்பினும், நுவரெலியா தலைமையக பொலிஸார் இரு சந்தேக நபர்களின் வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட அதிகமான இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் பல பொருடகளை கைப்பற்றியுள்ளதாகவும் இவற்றின் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டுப் பொருட்கள் அடங்குவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் நேற்று (15) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.இதன்போது மேற்படி இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here