மன்னார் வீரர்கள் இருவர், தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு!

0
32

இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான  N.கெஸ்ரோன் ,  K.ஜெனிஸ்ரன் ஆகியோர் குறித்த தெரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

குறித்த இரு மாணவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது சர்வதேச உதைபந்தாட்ட போட்டியானது சீனாவில் இம் மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இப் போட்டி “ U16 Tainyu Liufang Cup – 2025” ற்கான போட்டியாகும். இதற்கான மேலதிக பயிற்சிகள் இம் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இம்மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வியை மேற்கொள்கின்றார்கள்  என்பதன் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

இம் மாணவர்களின் மேலதிக பயிற்சிக்கான செலவையும், அவர்கள் சீனாவில் இருக்கும் போது ஏற்பட உள்ள மேலதிக செலவையும் தாங்கிக் கொள்வதற்கு பண வசதி இல்லாத சூழ்நிலையில் தற்போது இருக்கிறார்கள்.

எனவே இம் மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசிய மட்ட அணியில் ஒருவராக விளையாடுவதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here