கிழக்கு மாகாண முதலமைச்சர், தன் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையின் போது மன்னிப்புக்கோரச் சொன்னால் தான் மன்னிப்புக் கோருவேன் எனத் தெரிவித்துள்ளார்.
கடற்படை அதிகாரி ஒருவரை அவதூறாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்அஹமட் பேசியதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, கிழக்கின் முதலமைச்சருக்கு எதிராக நேற்று (26) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முதலமைச்சர் மன்னிப்பு கோரவேண்டும் என்று வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக மட்டக்களப்பு மங்களாராமய விஹாரையின் மதகுரு அம்பிட்டியே சுமனரத்னதேரர் நேற்று காலை முதலமைச்சரின் வீட்டுக்கு சென்று அவரை மன்னிப்பு கோருமாறு வலியுறுத்தினார்.
எனினும் இதன் பின்னர் கருத்துரைத்த முதலமைச்சர், இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த விசாரணையின் பின்னர் தாம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோரப்பட்டால் மன்னிப்புக்கோர தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.