அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் பஸ் தரிப்பிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அக்கரப்பத்தனை தவிசாளர் கதிர்ச்செல்வன் தலைமையில் நாட்டி வைக்கப்பட்டது.
எல்பியன் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் இந் நகரத்தில் பஸ் தரிப்பிடம் தேவையெனவும் பஸ் தரிப்பிடம் இன்மையால் இப்பிரதேச மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகுவதாகவும் கோரிக்கையை முன்வைத்தமைக்கு அமைய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசணையில் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் பணிப்புரையில் மன்றாசி நகருக்கான பஸ் தரிப்பிட அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்ச்செல்வன், முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் சக்திவேல்,இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன், அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் உட்பட அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
நீலமேகம் பிரசாந்த்