அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட மன்றாசி நகரில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கான காணி உறுதி பத்திரம் இ.தொ.காவின் உபத்தலைவர் சச்சுதானந்தன் ஊடாக ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
கடந்த 125 வருட காலமாக மன்றாசி நகரில் எவ்விதமான கோவிலும் அமையாத பட்சத்தில் தன் முயற்சியால் குறித்த நகரில் விநாயகர் கோவிலை அமைத்து கடந்த 12 வருடமாக குறித்த கோவிலுக்கு உறுதி பத்திரம் இல்லாத நிலையில் குறித்த கோவிலுக்கான உறுதி பத்திரத்தை பெற்றுக்கொடுக்க மும்முரமாக செயற்பட்டு அதன் பலனாக மன்றாசி நகரில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கான உறுதி பத்திரத்தை ஆலய நிர்வாகத்திடம் வழங்கி வைத்தார் இ.தொ.காவின் உபத்தலைவர் சச்சுதானந்தன்.
இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் உட்பட ஆலயத்தின் நிர்வாக குழுவினர் மற்றும் மன்றாசி மக்கள் என பெருந்திரளானோர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்