மனநிலை பாதிக்கபட்டோர் தினத்தை முன்னிட்டு டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் மனநல வைத்திய நிபுனர் எஸ்.எம்.டி.பி.சேனவிரத்தின தலைமையில் 09.10.2018.செவ்வாய்கிழமை காலை 08.30மணி முதல் 10மணிவரை சந்தை
ஒன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது
இந்த சந்தையில் மன நிலை நோயாளர்களினால் மறக்கரிவகைகள் பிளாஸ்டிக் பொருட்கள் இனிப்பு பண்டங்கள் கைபணி பொருட்கள் போன்ற பொருட்கள் நோயாளர்களின் ஊடாக பொருட்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரபட்ட வியாபாரம்
செய்யபட்டது.
இந்த சந்தை நடவடிக்கையில் டிக்கோயா கிழங்கள் வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் தாதியார்கள் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு இந்த பொருட்கள் விற்பனை செய்யபட்டது.
இதன் ஊடாக இந்த நோயாளர்களுக்கு எதிர் காலத்தில் ஒரு வருமானத்தை தேடிகொள்ளும் நோக்கிலும் இந்த நோயில் இருந்து மெல்ல மெல்ல விடுபட கூடிய நிலமையும் ஏற்படும்மென தெரிவிக்கபடுகிறது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)