23ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது
பேராதனை, சிறுவர் வைத்தியசாலையில் மயக்க மருந்து வழங்கப்பட்ட இரண்டரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியருவதாவது,கடந்த மாதம் 23ஆம் திகதி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் குறித்த குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள், சத்திரசிகிச்சைக்காக மயக்க மருந்தினை உட்செலுத்த வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதன்படி சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும் இதனால் குழந்தை உயிரிழந்ததாகவும் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னதாக இரண்டு தடவைகள் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு பெண்கள் மயக்கமடைவதற்காக வழங்கப்பட்ட மருந்தினால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதில் ஒரு கர்ப்பிணி தாயும் உள்ளடங்குகின்றனர்.இவ்வாறானதொரு பின்னணியில் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் என அரச மருந்தாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.