சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டில் மரக்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலை பட்டியலுக்கு அமைய கோவா ஒரு கிலோகிராம் 90 முதல் 110 வரையிலும், கரட் ஒரு கிலோ 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலும், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 110 ரூபாய் முதல் 140 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே நேரம் குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 1400 முதல் ஆயிரத்து 500 ரூபாய்க்கு இடைப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை பட்டியலுடன் ஒப்பிடுகையில் சில்லறை விற்பனை நிலையங்களில் கரட் ஒரு கிலோ 200 -250 ரூபா வரையிலும் கோவா 180 ரூபா தொடக்கம் 200 வரையிலும், லீக்ஸ் 200 தொடக்கம் 250 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுவதுடன்பலபகுதிகளில் இதனை விட அதிகமான விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.