தலவாக்கலை லோகி தோட்டத்துக்கு அருகில் திங்கட்கிழமை வெட்டப்பட்ட மரம் ஒன்றின் கிளை வீழ்ந்ததால் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த மரம் வெட்டப்படுவதற்கு முன்னதாக காவல்துறை அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்கூட்டியே காவற்துறையினருக்கு தெரியப்படுத்தி இருந்தால், இந்த விபத்தை தடுத்திருக்க முடியும் என்று சிரேஷ்ட காவல்துறை அலுவலர் ஒருவர் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு, 28ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.