மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்- வட்டவளை ஞானாநந்தகம பகுதியில் சம்பவம்!!

0
200

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை ஞானாநந்தகம பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளன.குறித்த சம்பவம் 17.07.2018 அன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை எனவும், வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் இருந்த 4 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக வீட்டின் இரண்டு அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளது.

DSC00217 DSC00219 DSC00229 DSC00237

மேற்படி மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸாரும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here