இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் கொவிட் தொற்றால் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது குடும்பத்தினர் இதனை தெரிவித்தனர்.
கொவிட் தொற்றுக்குள்ளான 9ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.
ரெபிட் என்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் பிசிஆர் பரிசோதனைகள் செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



