விலை குறைப்பானது எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மருந்துகளின் விலைகள் 16 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அதிகரிக்கப்பட்ட 60 வகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஏனைய மருந்துகளின் விலைகளும் படிப்படியாக குறைவடையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.