புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நபரொருவர் கோடரியால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் தனது மனைவியின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றியதையடுத்து குறித்த தந்தை உயிரிழந்தவரை கோடரியால் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் புஸ்ஸல்லாகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவராவார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புஸ்ஸல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.