மறைந்த தாய்லாந்தின் மகாராணி சிரிகிட் அன்னாருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (31) காலை கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகத்தில் அனுதாபங்களைத் தெரிவித்தார்.
அதனையடுத்து மறைந்த தாய்லாந்தின் மகாராணி சிரிகிட் அன்னாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் அமைந்துள்ள தாய்லாந்து தூதரகத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அனுதாபங்களைத் தெரிவித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னாரது புகைப்படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மலர் அஞ்சலியும் செலுத்தினார்.
 
		
