மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடையில்லை… நீதிமன்றம் உத்தரவு!

0
257

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்காக சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ரூபாய் 4.50 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் முன்பணம் பெற்றுக்கொண்டும் அந்த படத்தில் நடித்துக் கொடுக்காமல் சிம்பு வேறு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சிம்பு ரூபாய் ஒரு கோடி உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த வழக்கு விசாரணையின் அடுத்த கட்டத்தில் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “இந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. ஒப்பந்தம் போடப்பட்டு ஒரு வருடத்துக்குள் படம் தொடங்காவிட்டால், முன்பணத்தைக் கொடுக்கத் தேவையில்லை” என வாதாடியுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றம் சிம்பு தரப்பை ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக கட்ட சொல்லியது. அதற்கான ரசீதை சமர்ப்பித்தது சிம்பு தரப்பு. இதையடுத்து இந்த வழக்கில் மத்தியஸ்தராக வழக்கறிஞர் என். எல். ராஜாவை நியமித்துள்ளது. மேலும் சிம்பு வேறு படங்களில் நடிக்கவோ அல்லது வெளிநாடு செல்லவோ தடைவிதிக்க முடியாது என கூறியுள்ளது. இதனால் சிம்பு மற்ற படங்களில் நடிக்க எந்த தடையும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here