மலச்சிக்கல் பிரச்சனைக்கு அற்புத இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

0
168

மலச்சிக்கலை போக்க லெமன் சாறு உதவுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் குடல் இயக்கம் சீராகும், மலச்சிக்கல் நீங்கும். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கலாம்.உலர்ந்த திராட்சையில் டார்டாரிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இது மல மிளக்கியாக செயல்படுகிறது. இதில் நிறைய ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கும்.

மலச்சிக்கலை போக்க புதினா அல்லது இஞ்சி டீ யை குடிக்கலாம். இதிலுள்ள மலமிளக்கும் தன்மை எளிதாக மலம் வெளியேற உதவுகிறது. மேலும் புதினா அல்லது இஞ்சி டீ குடலியக்கத்தை மேம்படுத்தி, பசியை தூண்டுகிறது. ஜீரண மண்டலத்தை வலுப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

கடுக்காயில் மலமிளக்கியாக செயல்படும் பண்புகள் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பு கடுகாய் பொடியை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். கடுக்காய் பசியைத் தூண்டும். செரிமானதை அதிகரிக்கும்.

கொய்யாப் பழதில் ஆப்பிளுக்கு நிகரான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக கொய்யாப்பழத்தில் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளதால், மலம் எளிதாக வெளியேற உதவுகிறது. கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் இயக்கம் சீராகும், மலச்சிக்கல் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here