மலையகத்திலும் சிறப்பாக இடம்பெற்ற மகா வரலக்சுமி விரதம்…

0
188

ஐந்து சக்திகளை வாரி வழங்கும் மகா வரலக்சுமி விரதம் 24.08.2018 அன்று நாடெங்கிலும் இந்து ஆலயங்களில் மிக சிறப்பாக நடைபெற்றன.அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகிய ஐந்து சக்திகளையும் வாரி வழங்கும் வரலக்சுமி விரதம் 24.08.2018 அன்றாகும். இந்த விரதத்தினையொட்டி நாடெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களில் வரலக்சுமி விரத பூஜை மிக சிறப்பாக நடைபெற்றன.

அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகிய இந்த சக்திகள் வரலட்சுமியின் அம்சங்கள் எனவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ளும் போது நம் வாழ்வில் இந்த அம்சங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி என்பதை போல மகாலட்சுமிக்கு அருகம்புல் ஆகும். ஆவணி மாத சுக்கிலபட்ச வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் மலையகத்தில் அட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் இந்த விரதத்தின் விசேட வழிபாடுகள் ஆலய பிரதம குரு பாலசுப்பிரமணியம் சர்மா தலைமையில் நடைபெற்றன.

இதன் போது விநாயகர் வழி திருவிளக்ககு பூஜை, மகா லக்சுமிக்கு அலங்கார பூஜை ஆகியன மிக சிறப்பாக நடைபெற்றன. இந்த பூஜையில் சுமார் 500ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here