மலையகத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக அட்டன் கொழும்பு பிரதான வீதியின் டி.கே.டபள்யு பகுதி பகுதி அளவில் நீரில் முழ்கியுள்ளன 07.06.2018. வியாழக்கிழமை பிற்பகல் வேலையில் பெய்த கடும் மழையின் காரணமாக அட்டன் கொழும்பு பிரதான வீதி பனிமூட்டமாகவும் காணபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேலை குறித்த பகுயில் சில நேரம் வாகன நெரிசல் காணபட்டமையும் குறிப்பிடதக்கது இந் நிலையில் அட்டன் நகர பகுதியில் காணபடுகின்ற கால்வாய்களில் வெள்ள நீர் பெறுக்கெடுத்தமையே இதற்கு காரணமென தெரிவிக்கபடுகிறது
இதேவேலை அதிகமழையின் காரணமாக அட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வீதி மூடபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். இதேவேலை குறித்த தியகல பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்துள்ளமையாலே அட்டன் கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்திற்கு தடைவிதிக்கபட்டுள்ளதாகவும் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேலை வட்டவலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் வெளிஒயா அக்ரோயா தோட்டபகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக வெள்ள நீரினால் நான்கு வீடுகள் முழுமையாக பாதிக்கபட்டுள்ளதாகவும் பாதிக்கபட்டவர்கள் தற்காலிக இடங்களில் தங்கவைக்கபட்டுள்ளதாகவும் வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)