” இளைஞர்களின் கையில் நாளைய உலகம்” என்ற வார்த்தையை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள்.ஆனால் இந்த இளைஞர்களுக்கு உரிய முறையில் வழிக்காட்டல்கள் வழங்கப்படுகின்றதா..? என்ற கேள்வியை நமக்குள் நாம் கேட்டு பார்க்க வேண்டும்.
பாடசாலை காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு அறிவுசார் விடயங்களும் மிக முக்கியமானவை இவையே எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது . ஆனால் இவை உரிய முறையில் வழங்கப்படாவிடின் மாணவர்களின் வாழ்க்கை சூன்யமாக மாறிவிடும்.
அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் தலைமைத்துவ பயிற்சிகள் இடம்பெற்று வருகிறது.இது பாரட்டதக்க விடயம். ஆனாலும் இந்த பயிற்சிகளை வழங்குவோர் தகுதியுள்ளவர்களாக என்பதை ஆராய்ய வேண்டி உள்ளது.
சமூகத்தின் மீது அக்கரை கொண்டு செயற்படும் இவர்களை குறை கூற வரவில்லை ஆனாலும் இவர்கள் போதிய பயிற்சிகளை பல்கலைக்கழகங்களில் பெற்றவர்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.
குறிப்பாக மலையகத்தில் இவ்வாறான தலைமைத்துவ கருத்தரங்குகளை பல அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன. இது நல்ல விடயம். ஆனால் இந்த அமைப்புகளில் பல ( சில நல்ல அமைப்புக்களும் உள்ளன) மாணவர்களை கொண்டு வியாபாரம் நடத்துகிறது.
இந்த அமைப்புக்களில் அதிகமான அமைப்புக்கள் உரிய முறையில் பதிவு செய்யாமல் இருக்கின்றன.
அத்துடன் மாணவர்களின் கருத்தரங்கு படங்களை காட்டி வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக பண வசூலில் ஈடுப்படுவது வேதனையான விடயம்.
இவ்வாறு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கும் அமைப்புக்கள் குறித்து கல்வி அமைச்சு ஆராய்ய வேண்டும்.குறிப்பாக வலய கல்வி அதிகாரிகள் இது உரிய அனுமதி பெற்றா நடைப்பெறுகிறது .என்பதை பார்க்க வேண்டும்.
அன்மையில் நடைப்பெற்ற தலைமைத்துவ கருத்தரங்கில் பேசிய பயிற்சியாளர் கூறிய கருத்துக்களை ஆசிரியர்கள் கேட்டு இருந்தால் இவர்களை அந்த இடத்தில் இருந்து துரத்தி இருப்பார்கள் என அங்கு சென்றிருந்த நண்பரொருவர் கூறினார்.
இவ்வாறான பயிற்சிகளை வழங்குவோர் குறிப்பாக கல்வி அமைச்சில் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருத்தல் அவசியம். ஏனெனில் இவர்களும் ஒருவகையில் ஆசிரியர்கள்.
இவர்கள் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் மாணவர்களின் உள்ளத்தில் இலகுவாக பதியும்.இதனால் இவர்கள் குறித்து மத்திய மற்றும் மாகாண கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் .இல்லையேல் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
இந்த தலைமைத்துவ பயிற்சிகளை நிறுத்த சொல்லவில்லை. உரிய முறையில் செய்வதற்கு அரசாங்கம் பொறி முறையன்றை உருவாக்க வேண்டும்.
இது பணம் மற்றும் புகழுக்காக செய்யும் செயற்பாடு அல்ல மாணவர்களின் வளர்ச்சிக்காக நடத்தப்பட வேண்டும்.பல்கலைக்கழகத்தில் இதற்காக பல கற்கை நெறிகள் உள்ளன.இதனை கற்றவர்களை கொண்டு அரசாங்கமே பாடசாலைகளில் நடத்தினால் நன்றாக இருக்கும்.
மலையக மாணவர்களை விற்று வயிற்று பசியை தீர்த்து புகழ்பெறும் இவ்வாறான ஒரு சில அமைப்புக்களினால் ஏனைய நல்ல அமைப்புக்களுக்கும் அவப்பெயர்.
எனவே இவ்வாறான வியாபார அமைப்புக்களுக்கு எதிராகவும் பதிவு செய்யாத அமைப்புக்களுக்கு எதிராக கல்வி அமைச்சு உரிய நடவடிக்கையை எடுக்குமா என்பதை பார்ப்போம்..!
– மலையக தமிழன்-
.