மலையகத்தில் உள்ள 843 பெருந்தோட்ட பாடசாலைகளில் 770 பாடசாலைகள் 3000 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யபடுவதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய மாகாண பாடசாலைகளின் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணின் பங்கேற்புடன் மீப்பே தேசிய கல்வியற் நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஆளனி பெற்றுக் கொடுத்தல் மற்றும் ஆளனியினருக்கான பயிற்சிகள் உட்பட பாட ரீதியான மேம்பாட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருகின்றதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.