தோட்ட தொழிலாளர்களின் ஆர்பாட்டம் காரனமாக தேயிலை ஏற்றுமதி குறைவடைந்து செல்கின்றமையால் டொலரின் பெறுமதி இன்று அதிகரித்து கானபடுகிறது. இதற்கு நாட்டின் ஜனாதிபதி பொறுப்பு கூற வேண்டு என்கிறார் அகில இலங்கை தோட்டதொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ்
மலையக பெறுந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தினை வலியுறுத்தி மலையகம் எங்கும் முன்னெடுக்கபடுகின்ற ஆர்பாட்டத்தின் காரனமாக நாட்டின் தேயிலையின் ஏற்றுமதி குறைவடைந்து செல்லுகின்றமையால் டொலரின் விலை அதிகரித்து கானபடுவதாகவும் இதற்கான முழு பொறுப்பினையும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொறுப்பு கூறவேண்டும் என அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ் குற்றம் சுமத்தியுள்ளார் 11.12.2018.செவ்வாய்கிழமை ஹட்டனில் ஏற்பாடு செய்யபட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார் இந்த சந்திப்பின் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ் உட்பட கிட்னன் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்
இதன் போது மேலும் கறுத்து தெரிவித்த அவர் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை அதிகரிப்பதற்கான கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கைச்சாத்திடபடுகிறது அதன் பிரகாரம் கடந்த மாதம் 15ம் திகதியுடன் பழய கூட்டு உடன் படிக்கை கலாவதியாகி புதிய கூட்டு உடன்படிக்கை நடைமுறைபடுத்த பட்டு தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தபட்ட தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் மேற்கொண்டிருக்க வேண்டும் ஆனால் இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் சம்பந்தமாக அரசாங்கமோ அல்லது தொழிற்சங்க தலைவர்களோ அல்லது முதலாளிமார் சம்மேளனமோ கண்டு கொள்ளாத சந்தர்ப்பத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று தனிச்சையான தமது உரிமைக்கான போராட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு நிற்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது
விஷேடமாக ஒக்டம்பர் மாதம் 15ம் திகதி கூட்டுஉடன் படிக்கை கலாவதியாகின்ற பொழுது அதில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் உடனடியாக தலையிட்டு ஒக்டம்பர் மாதம் 16ம் திகதி அதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தை வழங்கி இருக்கவேண்டும் ஆனால் டிசம்பர் 04ம் திகதியில் இருந்த தோட்ட தொழிலாளர்களால் ஆரம்பிக்கபட்ட ஆர்பாட்டம் பல்வேறு வடிவங்களில் சென்று இன்று வேலை நிறுத்த போராட்டமாக மாறியிருக்கிறது பெறுந்தோட்ட தொழிலாளர்கள் இன்று 70சதவீதமானோர் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள் இந்த போராட்டம் இன்னும் முன்நோக்கி சென்று ஏனய துறையினரையும் இனைத்து கொண்டு இது தேசிய ரீதியிலான போராட்டமாக வடிவம் பெறும் என்பதையும் அவர் தெரிவித்தார். இன்று எமது நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத சூழ்நிலை கானபடுகிறது தனிச்சையான போக்கை முன்னெடுக்கும் ஜனாதிபதி மைத்திறிபால சிறசேன தான் விருப்பபடி அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்ற பொழுது தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்திலும் நாடடின் ஜனாதிபதி கட்டாயம் தலையிட வேண்டும் என அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் கோறிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார் மலையக அரவியல்வாதிகளுக்கு தான் விருப்படி அமைச்சி பதவிகளை வழங்கும் ஜனாதிபதி இந்த நாட்டில் உள்ள அசரசாசனத்தை தனது விருப்பபடி முகாமைதுவ படுத்தி தனக்கு தேவையான வழியில் திசைதிருப்ப முடியுமாக இருந்தால் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஏன் மைத்திரிபால சிறிசேன அவர்கள் தலையிட்டு அதற்கு ஒரு தீர்வினை பெற்று கொடுக்க முடியாது
அரசாங்கம் இல்லாத இந்த நாட்டில் அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூற வேண்டுடியது ஜனாதிபதி தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட மறுத்தால் எதிர் வரும் காலங்களில் மைத்திரிபால சிறசேன வீடு செல்ல வேண்டடிய நிலமை கானப்படும் இன்று அமைச்சரவை இல்லை கேபினட் அமைச்சர்இல்லை அரசாங்கம் இல்லை என்பதற்காகத்தான் இன்று அனைத்து பொறுப்பகளுக்கும் ஜனாதிபதி அவர்களே பொறுப்பு கூற வேண்டும் ஆகவே இன்று அரச உழியர்களுக்கு நிகராக தோட்;ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்க 1281ருபாவை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)