மலையகத்தில் கடும் மழை- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
158

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து காற்றுடன் கூடி கடும் மழை பெய்துவருகின்றது இதனால் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெஸ்போட் கீழ் பிரிவு தோட்டத்தில் 13ம் இலக்கம் கொண்ட குடியிருப்பில் 09 வீடுகள் உள்ள லயன் தொகுதிக்கு
முன்பகுதியில் பாரிய மண்மேடு சரிந்துள்ளது விழுந்துள்ளது.

இதனால் 29 பேர் அங்கிருந்து  தற்போது நு/ எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் 13 ம் திகதி இன்று இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட லயன் தொகுதியினை தோட்ட நிர்வாகம் நானுஒயா பொலிஸ் அதிகாரிகள் நுவரெலியா பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் எஸ் என்டனிராஜ்
உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் பிரதேச செயலகம் வழங்கிவருகின்றது.
அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here