மலையகத்தில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. இந்த வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல் நீர்த்தேக்கத்தில் என்றுமில்லாத அளவுக்கு நீர் தாழியிறங்கியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக காணப் பட்ட வறட்சியான காலநிலையினையடுத்து உஸ்னம் அதிகமாக காணப்படுவதனால் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால் நடைகளுக்கு தேவையான புல்லை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கால் நடைகளுக்கு போதியளவு உணவு வழங்க முடியாததன் காரணமாக பால் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் இதனால் தங்களது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே நேரம் வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் என்று மில்லாதவாறு நீர் தாழியிறங்கியுள்ளதாகவும் இதனால் நீர் முழ்கி கிடந்த கட்டடங்களின் இடிபாடுகள்,வீதிகள்,மற்றும் குன்றுகள் ஆகிய முழுமையாக தோற்றம்பெற்றுள்ளதாகவும் தற்போது தாழிறங்கியிருக்கும் நீர் நிரம்புவதற்கு குறைந்த ஒன்றரை மாதமேனும் தொடர்ச்சியாக மழை பெய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர்;.
எது எவ்வாறான போதிலும் தற்போது நிலவி வரும் வறட்சியினால் பல பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதுடன் நீரின்றி பலர் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது,
மலையக பல பகுதிகளில் காலை வேலை மிகவும் உஷ்னமான காலநிலை காப்படுவதாகவும் மாலை வேளையில் ஒரு சில பிரதேசங்களுக்கு சிறிதளவு மழை பெய்து வருவதாகவும் மேலும் சிலர் தெரிவித்தனர்.
மலைவாஞ்ஞன்