மலையகத்தின் மறுமலர்ச்சிக்காகவும், மலையக மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காகவும் ஆரம்பிக்கப்பட்டது “TEA ROOTS” எனும் தேயிலை வேர்கள் எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பு தனது முதலாவது கூட்டத்தை புஸ்ஸல்லாவையிலுள்ள யுனிக் வரவேற்பு மண்டபத்தில் நடாத்தியது, இதில் மலையகத்தில் உள்ள பல்வேறு பட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர், குறிப்பாக ஹட்டன்,நுவரெலியா,நாவலபிட்டி,
பத்தனை, செல்வகந்தை, மற்றும் புஸ்ஸல்லாவை மக்கள் கலந்துகொண்டனர்.
மலையக மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.
இதன் போது இவ்வமைப்பின் முக்கிய தலைவர்,செயலாளர், இணை செயலாளர்,பொருளாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர், இவ்வமைப்பின் செயற்பாடுகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என இவ்வமைப்பின் செயலாளர்
மாரிமுத்து ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.