மலையகத்தில் தொடரும் மழையினால் கேசல்கமுவ ஓயாவின்நீர் மட்டம் அதிகரிப்பு……

0
168

மலையகத்தில் தொடரும் மழையினால் கேசல்கமுவ ஓயாவின்நீர் மட்டம் அதிகரிப்புநாட்டில் நிலவும்சீரற்ற காலநிலைகாரணமாக    நீர்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து காணபடுவதாேடு நீர்தேக்கங்களின்வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.  இதேவேலை காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும்பொகவந்தலாவ சேல்கமுவஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துகாணபடுகிறது.

இதனால்சேகல்கமுவ ஓயாவின் நீர் மட்டம்அதிகரித்து காணபடுவதால் குறித்தகேசல்கமுவ ஓயாவிற்கு அருகாமையில் அமைக்கபட்டுள்ள மின்நிலையங்களில் பணிபுரியும்உத்தியோகத்தர்கலையும்சேசல்கமுவ ஓயாவில் ஊடாக இழுத்து செல்லபடும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடும் ஊழியர்களையும் மிக அவதானமாகசெயற்படுமாறு பொகவந்தலாவ பொலிஸார் கோறியூள்ளனர்.

இதேவேலை மலையகத்தில்தொடரும் மழை மற்றும் கடும்காற்றின் காரணமாக நோர்வூட்பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை பொயிஸ்டன் ஆகிய இடைபட்ட பகுதியில் பாரிய மரம்ஒன்று முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்துள்ளமையால் டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு கீழ்பிரிவு ரொப்கில்போனகோட் சிங்காரவத்தை பொயிஸ்டன் ஆகியதோட்ட பகுதிகளுக்கு கடந்த 06நாட்களாக மின்சாரம்தடைபட்டுள்ளதாகவும் இதனால்அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள்பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாகவும்தெரிவிக்கபடுகிறது.

இதேவேலை 18.08.2018.சனிகிழமைபெய்த கடும் மழையின் காரணமாக கெர்க்கஸ்சோல்ட் 310ஜீ கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட்     மேற்பிரிவு தோட்ட குடியிருப்பு ஒன்றின் மண்சுவர் இடிந்துவிழுந்துள்ளதாக இதனால் குறித்த குடியிருப்பாளர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையெனவும்குடியிருப்பில் இருந்த ஒரு உடமைகளுக்கு சேதம்   ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவபொலிஸார் தெரிவித்தனர்.

 

எஸ். சதீஸ், டி. சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here