மலையகத்தில் தொடர்மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு , நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு.

0
177

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்தும் தொடர் மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் முச்சக்கரவண்டி சாரதிகள், வர்த்தகர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த சில தினங்களாக நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இதனால் மலைகளுக்கும் மண்மேடுகளுக்கும் அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சில பிரதேசங்களில் மழையுடன் காற்றும் வீசி வருவதனால் மஸ்கெலியா பகுதியில் அடிக்கடி மின்சார துண்டிப்பும் ஏற்பட்டுள்ளன. சீரற்ற காலநிலை காரணமாக அட்டன் கொழும்பு அட்டன் நுவரெலியா வீதிகளின் பல பகுதிகளில் பனிமூட்டமும் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. இதனால் வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீர்ப்போசன பிரதேசங்களுக்கு அதிக மழை பதிவாவதனால் காசல்ரீ, மௌசாக்கலை, கெனியோன், லக்ஸபான, மேல்கொத்மலை, விமலசுரேந்திர உள்ளிட்ட நீரத்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளன. இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதாகமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here