மலையகத்தில் பாடசாலை மைதானத்தில் சுற்றித்திரியும் நரிகள்!

0
100

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட ஹைலண்ட்ஸ் ஆரம்ப பிரிவு பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் தொடர்ந்து நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள இலுக் வனப்பகுதியில் இருந்து குறித்த நரிகள் வரக்கூடும் எனவும் சந்தேகிக்கப்படும் நிலையில், காலையில் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வந்து ஊளையிடுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக, மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பாடசாலையில் சுற்றித் திரியும் நரிகளை பிடித்துவேறு பொருத்தமான இடத்திற்கு கொண்டு சென்று விடுவிக்குமாறு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றோம் என அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here