பிறந்திருக்கும் 2019ஆம் ஆண்டு வருடத்தில் சாந்தியும், சமாதானமும், சுபீட்சமும் உண்டாகுவதற்காகவும் இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் சமத்துவத்துடன் வாழவும் நாட்டின் அபிவிருத்திகள் முன்னேற்றகரமாக அமைய வேண்டும் எனவும் பிராத்தனை செய்து 01.01.2019 அன்று மலையகத்தில் அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் புதுவருட விசேட பூஜைகள் இடம்பெற்றது.இதில் அட்டன், கொட்டகலை பகுதியை சேர்ந்த அனைத்து இந்துக்களும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.
(க.கிஷாந்தன்)