மலையகத்தில் மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவர்களுக்கு முதலில் தடுப்பூசிகளை வழங்குங்கள்.

0
166
மலையகத்தில் தற்போது பரவலாக கொரோனாவின் கோர தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது இந்நிலையில் பலர் தம் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். மலையகத்திற்கு தடுப்பூசிகளை வழங்குவது வரவேற்கத்தக்கது. ஆனால் மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவர்களுக்கு முதல் கட்டத்திலேயே வழங்கினால் கொரோனா மேலும் பரவுவதை தடுக்க முடியுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்
தோட்டத்தொழிலாளர்கள் தேயிலை மலைகளிலே ஒன்றாகவே வேலைச்செய்கின்றனர். அவர்களோடு  முச்சக்கர வண்டி சாரதிகள், கிராம சேவகர்கள்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள், என பலர் தற்போது மக்களோடு மக்களாக  சேவையாற்றி வருகின்றனர். எனவே ஏதேச்சையாக சிலவேளை பரவக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.
எனவே இவர்களுக்கு முதல் கட்டத்தில் தடுப்பூசிகளை ஏற்றுமிடத்து மலையகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏதுவாய் இருக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் வே. ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here