மலையகத்தில் மேலும் 50ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைதிட்டத்தினை நிறைவு செய்ததன் பின் அந்த 50ஆயிரம் லயன் குடியிருப்பகளும் உடைதெரியபடும்!!

0
153

ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி கூறுகிறார் .மலையகத்தில் இன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பதவியை பழனி திகாம்பரம் அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் 5000ம் வீடுகள் கட்டபட்டுள்ளதாகவும் இந்த வருடத்தில் 10ஆயிரம் இந்திய வீடமைப்பு திட்டங்களும் இலங்கை அரசாங்கத்தால் வழங்கபட்டுள்ள 2000ஆயிரம் வீடுகளோடு மொத்தம் இன்னும் 12ஆயிரம் வீடுகள் முன்னெடுக்கபட உள்ளதோடு மேலும் 50ஆயிரம் வீடுகளை அமைத்து அந்த 50ஆயிரம் லயன் வீடமைப்பு திட்டத்தினை உடைத்தெரியபடுமென ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி கூறியுள்ளார்.

01.04.2018. அக்கரபத்தனை பகுதியில் அமைக்கபட்ட புதிய வீடமைப்பு திட்டத்திற்கு மக்கள் குடியமர்த்தபட்டவுடன் அக்கரபத்தனை பகுதியில் உள்ள லயன் குடியிருப்புகளை உடைத்தெரியும் வேலைதிட்டத்தின் போது கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார் .

340A8710 340A8735 340A8744 340A8767

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் எங்களுடைய சமூக மாற்றத்திற்கான இன்னுமொரு படிகல் என்று சொல்லபடவேண்டும். நாங்கள் இந்த தோட்டத்தில் புதிய கிராமத்தை அமைத்து வீடுகளை அமைத்து கொடுத்து எமது மக்கள் குடிபோனதற்கு பிறகு தற்பொழுது முதல் தடவையாக இந்த லயன் வீடுகளை உடைப்பதற்கு ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேலை மலையகத்தில் உள்ள அனைத்து லயன்குடியிருப்புகளும் உடைக்கபடும் பட்ஷத்தில் அதேபோல் புதிய வீடமைப்பு திட்டங்களும் முன்னெடுக்கபடும்மெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதிஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here