மலையகத்துக்கும் இந்திய தமிழ்நாட்டுக்குமிடையிலான உறவு அண்மைக்காலமாக விரிசலையடைந்து இருந்தது.இந்நிலையில் மீண்டும் அவ்வாறானதொரு உறவை கட்டியெழுப்ப ஜீவன் தொண்டமான் அடித்தளமிட்டுள்ளதாக இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் சந்திப்பூடாக மலையகத்தில் இடம்பெறும் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும்,அபிவிருத்தி பணிகளுக்கும் இந்தியவாழ் வம்சாவளி அனைவருக்கும் தமிழ்நாட்டின் ஒத்துழைப்பும் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி கொடுத்ததையிட்டு நன்றி தெரிவிப்பதாக இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் குறிப்பிட்டார்.