மலையகத்தைச் சார்ந்த மாற்றுகட்சி தலைவர்களால் பேசமுடியாதவற்றை தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க போன்றோரை அழைத்து வந்து சொல்லி கொடுத்து என்னை பற்றி மேடைகளில் பேசவைப்பது மாற்று கட்சி தலைவர்களின் கோழைத்தனமானது என கருதுவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று ஹட்டனில் ஏற்பாடு செய்யபட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் திகாம்பரம் இதனை குறிப்பிட்டார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர் .
இந’த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் பழனி திகாம்பரம் உட்பட நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியயோர் கலந்து கொண்டனர்
28.01.2018.ஞாயிற்றுகிழமை தலவாகலை நகரசபை மைதானத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அவர்கள் என்னையும் அமைச்சர் இராதகிருஸ்னண் அவர்களையும் தகாதவார்த்தைகளால் பேசியதாக குற்றசாற்றை முன்வைததுள்ளார்.
அமைச்சா எஸ்.பி.திசாநாயக்க என்பவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்கனவே சந்திரிக்கா அம்மையாரை சாரியை உருவி அனுப்புவேன் என ஊடகங்களின் ஊடாக பேசியமைக்கு எதிராக இரண்டு வருடங்கள் சிறைதண்டனையை அனுபவித்தவர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டபோது ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன அவர்களை மணல்திருடன், தண்ணிகல்லன்”,நெல்திருடன் என்று விமர்சித்தார்.
ஆனால் இன்று எமது ஜனாதிபதி மைத்திறிபாலசிறிசேன அவர்கள் பரிசுத்தமான தலைவர் என கூறுவதாக அமைச்சர் திகாம்பரம் மேலும் குறிப்பிட்டார்.
இது இவ்வாறு இருக்க மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் என்ற வகையில் மலையக மக்களுக்கு நான் ஏமு பெர்த்” நிலத்தில் வீடமைப்பு திட்டங்களை அமைத்து கொடுத்து அந்த காணிக்கான உறுதி பத்திரங்களையும் வழங்கியிருக்கின்றோம்
அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அவர்கள் என்ன கூறினாலும் எமது மலையக மக்கள் அதனை நம்பமாட்டார்கள் இருப்பினும் எதிர் வரும் பெப்ரவரி 10ம் திகதி இடம் பெறவிருக்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி நிச்சயமாக வெற்றிபெற்று நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளையும் கைபற்றுமெனவும் அமைச்சர் திகாம்பரம் மேலும் குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்