மலையகத் தமிழ் மக்களின் இருட்டறை வாழ்க்கைக்கு தனி வீட்டுத்திட்டம் முற்றுப்புள்ளி வைக்கத்தொடங்கியுள்ளது : சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு!!

0
179

அமைச்சர் திகாம்பரத்தினால் மலையகத்தில் முன்னெடுக்கப்படுகின்ற தனி வீட்டுத்திட்டமானது மலையகத் தமிழ் மக்களின் இருட்டறை வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கத் தொடங்கியுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.அமைச்சர் திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப மலையக புதிய கிராமங்கள் ,உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாயஅபிவிருத்தி அமைச்சின் ஒரு கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் எபோட்ஸிலி புளோரன்ஸ் தோட்டத்தில் 10 வீடுகள் நிருமாணிக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டின் உரிமையாளர்களுக்கான சாவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் செனன் வட்டார அமைப்பாளர் விஜேந்திரன் , அட்டன் – டிக்கோயா நகரசபை உறுப்பினர் திருமதி ராமேஸ்வரி , அட்டன் ட்ரஸ்ட் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு உத்தியோகஸ்தர் மஞ்சுளா , தோட்ட வெளிக்கள உத்தியோகஸ்தர் உட்பட வீடமைப்புத்திட்டத்தின் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

அட்டன் பிரதேசத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் புளோரன்ஸ் தோட்டமும் ஒன்றாகும். இந்தத் தோட்டத்தில் உரிய வீடுகள் இன்றி பலகுடும்பங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றனர். இவர்களின் நலனைக்கருத்திற்கொண்டு அமைச்சர் திகாம்பரம் முதற்கட்டமாக இந்தத் தோட்டத்துக்கு 10 வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளார். மேலும் 10 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வீடமைப்புத்திட்டத்தின் திறப்பு விழாவுக்கு முன்பாக வீட்டுரிமையாளர்களுக்கு திறப்புக்களை இன்று வழங்கியுள்ளோம். இன்று முதல் உங்கள் இருட்டறை வாழ்வுக்கு விமோசனம் கிடைத்துள்ளது. நிலத்துக்கும் வீட்டுக்கும் உரிமையுள்ள குடும்பத்தினராக மாறியுள்ளீர்கள். இத்தகைய நல்ல நிலைமையை ஏற்படுத்தி அமைச்சர் திகாம்பரத்துக்கும் இன்றைய அரசாங்கத்துக்கும் நீங்கள் நன்றியுள்ளவர்களாக செயற்படவேண்டும். சொந்த நிலத்தையும் சொந்த வீட்டையும் பெற்று வருகின்ற எமது மக்கள் இனிமேல் தோட்ட நிருவாகத்தை நம்பியிருக்க வேண்டியதில்லை. சுயமாக செயற்பட்டு தமத வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here