மலையகப்பகுதியிலிருந்து தூர பஸ் சேவைகள் இன்று (15) வழமை போல் இடம் பெறாமையினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துனர்.
ஹட்டனிலிருந்து காலி, மற்றும் கொழும்பு நோக்கி புறப்படும் வழமையான பஸ் சேவைகள் இன்று இடம்பெறவில்லை இதனால் இந்த பஸகளில் பயணஞ் செய்யும் பயணிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தனர்.
கொழும்புக்கு இன்று ஒரு சில பஸ் சேவைகள் மாத்திரம் இடம்பெற்றதனால் குறித்த பஸ்களில் அதிகமான பயணிகள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டன. இதனால் ஒரு சிலர் தங்களது பயணங்களை தொடர முடியாது வீடு திரும்பினர்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று மலையகப்பகுதிகளிலிருந்து சேவையில் ஈடுபடும் தனியார் பஸகள் மிகவும் குறைந்த அளவே சேவையில் ஈடுபட்டன.
இதனால் விடுமுறைக்காக வீடு திரும்பிய ஊழியர்கள் தங்களது தொழிலுக்கு செல்வதற்கு முடியாது மிகவும் சிரமப்படுவதை அவதானிக்க முடிந்தன.
இதே நேரம் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான தூர சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு டயர் இல்லாததன் காரணமாக சேவையில் ஈடுபடுத்தப்பட முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மலைவாஞ்ஞன்