மலையக மக்கள் சக்தியின் தலைவர் இரான் செந்தூரன் தெரிவிப்பு.
மலையகம் 200 ஐ நாம் இன்று கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் மலையக மக்களின் கல்வி பொருளாதாரம் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்திலம் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றனர். இவ்வாறான ஒரு சூழ் நிலையிலும் மலையகத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் சாதனை படைத்து கொண்டு தான் இருக்கின்றனர்.
மலையகத்தில் உள்ள பலருக்கு திறமையிருந்து சாதிப்பதற்கான சந்தர்ப்பமில்லை அதற்கு சிறந்த உதாரணமாக கண்டி மாவட்டத்தில் உடபுஸ்ஸால்லாவை நயபன பாடசாலை சேர்;ந்த அசானியை குறிப்பிடலாம். அந்த மாணவிக்கு தனது திறமையினை நிரூபிக்க உரிய பொருளாதார வசதிகள் இருந்திருந்தால் இன்று அந்த மாணவிக்கு அந்நிலை உருவாகியிருக்காது
அதே போன்று தான் இன்று மலையகத்தில் குறுந் திரைப்படங்கள் தயாரிப்பதில் பலர் சாதனை படைத்துள்ளார்கள் அவர்களுக்கு தங்களது திறமையினை வெளிக்குகொணருவதற்குரிய பொருளாதார வசதிகளுக்கும் களமும் கிடைக்கவில்லை. இந் நிலையில் மலையகம் 200 கொண்டாடும் நிலையில் மலையகத்தில் உள்ள திறமையானவர்களை முன் கொண்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அதற்கான நிதியம் ஒன்றினையாவுது உருவாக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
மலைவாஞ்ஞன்