“மலையகத்தின் நிலையான தொழிற்சங்கமான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரின் ஆலோசனையைப் பின்பற்றி நடப்பதே தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கு உந்து சக்தியாக அமையும்” என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் இளைஞர் அணி செயலாளர் பொ. சதீஷ்குமார் தெரிவித்தார்.
அண்மையில் மலையகஅரசியல் அரங்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பொன்றில் சதீஷ்குமார் கலந்து கொண்டு இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தை இன்று சந்தித்த சதீஷ்குமார் தொடர்ந்து தனது அரசியல் செயற்பாடுகளுக்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தச் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சதீஷ்குமார்:
“தொழிலாளர் தேசிய சங்கம் மலையகத்தில் நிலையானதொரு தொழிற்சங்கமாகும்.
இந்தச் சங்கத்தின் தலைவர் மக்கள் நலன் கருதி செயற்படக்கூடியவர்.
அந்த அடிப்படையில் எதிர்காலத்தில் அவரின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி முக்கியஸ்தர்ளுடன் இணைந்து ஒரு முறையான திட்டமிடலுடன் செயல்படுவேன்” என்றார்.




