மலையக இந்து குருமார்கள் ஒன்றியத்தின் 18 வருட பூர்த்தியினை முன்னிட்டும் மலையகத்தில் ஆன்மீகம் சமூகம் மற்றும் கலை கலாசார துறைகளில் சேவையாற்றிய பலர் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தகுதியுடையவர்கள் கீழ் விலாசத்திற்கு அனுப்பி வைக்குமாறு இலையக இந்து குருமார் ஒன்றியத்தின் ஸ்தாபரும் பொதுச்செயலாளருமான சிவஸ்ரீ சுரேஸ்வர சர்மா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர அறிவிக்கையில் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் கடந்த 2006ம் ஆண்டு ஆரம்பித்து 2023ம் ஆண்டுடன் 18 வருடங்கள் நிறைவை முன்னிட்டும் மலையக மக்கள் நாட்டிற்கு வந்து 200 வருடங்கள் நிறைவை முன்னிட்டும் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியமும் இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களமும் இனைந்து நடாத்தும்
மாபொரும் அறநெறி, கலை, கலாசார,பாரம்பரிய கௌரவிப்பு விழா எதிர்வரும் 2023ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ம் 24ம் திகதி சனிக்கிழமையும் ஞாயிற்று கிழமையும் ஹட்டன் மாநகரில் இலங்கை மலையக இந்துகுருமார் ஒன்றியத்தின் 18ம் வருட பூர்த்தி விழா,ஆன்மீக எழுச்சி விழா,மலையகம் 200 எனும் தொனிப்பொருளில் நடாத்த எமது ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இவ்விழாவில் மலையக அறநெறி மாணவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகள்,பரதநாட்டியம்,கோலாட்டம்,கும்மியாட்டம், மயிலாட்டம்,மங்களவாத்தியகச்சேரி,தப்பு,உடுக்கு,உருமிசிலம்பாட்டம்,காவடியாட்டம்,கரகாட்டம்,காமன்கூத்து,பொன்னர்சங்கம்,அருச்சுனர்தபஸ்,யோகா கலை,பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் எமது பாரம்பரிய கலை,கலாசாரங்கலை அழியாமல் கட்டி காத்துவரும் ஆசான்களையும்,அறநெறி ஆசிரியர்கள்,பரதகலை,யோகாகலை,சிலம்ப கலை ஆசான்கள் ஆன்மீக தலைவர்கள்,சமயத்திற்காக போராடுபவர்கள் சமய சிந்தனையாளர்கள் ,சமய தொண்டர்கள் போன்றோரை கௌரவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
மேற்குறிப்பிட்ட வகையில் கௌரவவிருதுகளை பெற தகுதி உடயவர்கள் உங்களது சுய விபரங்களுடன் பாஸ்போட் சைஸ் படம் மூன்றுடன் எந்த விடயத்தில் தங்களுக்கு தகுதி திறமை இருக்கிறது என்பதனையும் குறிப்பிட்டு எமது தலைமை காரியாலயத்திற்கு பதிவு தபாலில் 10ஃ10ஃ2023 க்கு முன் கிடைக்க கூடியதாக அனுப்பவும்.
விலாசம்
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் தலைமை பீடம்
இலக்கம் 03 நுவரெலியா வீதி
மேபீல்ட் சந்தி குடாஓயா ஹட்டன்
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மலைவாஞ்ஞன்