எரிபொருள் விலை குறைப்பு தகவல் பரவியதனையடுத்து மலையகத்தில் உள்ள பல எண்ணை நிரப்பு நிலையங்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு நிலவிவருகிறது.
இதனால் வாகன சாரதிகள் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.
எண்ணை விலையில் மாற்றம் ஏற்பட போகின்றது என்று அறிந்து கொண்டு எண்ணை நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எண்ணை கொள்வனவு செய்யவில்லை இதனால் நேற்று இரவு ஹட்டன் கொட்டகலை தலவாக்கலை உள்ளிட்ட பல பிரதான நகரங்களில் வானங்கள் பெற்றோல் டீசல் பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இந்த பெற்றோல் வரிசை காரணமாக பிரதான வீதியின் போக்குவரத்து நெரிசல் நிலையும் உருவானது. இன்றைய தினம் பெற்றோல் மற்றும் டீசல் இல்லாததன் காரணமாக முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் தனியார் பஸ் சாரதிகள் உரிமையாளர்கள் தங்களுடைய தொழிலினை செய்ய முடியாது பெரும் நெருக்கடி நிலைக்கு ஆளாகினர்.
ஒரு சில தனியார் பஸ்கள் டீசல் தட்டுப்பாடு காரணமாக பஸ்ஸினை எண்ணை நிரப்பு நிலையங்களிலேயே தரித்து வைத்திருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.
எது எவ்வாறான போதிலும் விலை குறைப்பு இடம்பெறும் விற்பனையாளர் தங்களுக்கு நட்டம் ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக நடந்து கொள்வதாகவும் விலை அதிகரிக்கும் போது எந்த வித நலனையும் பாராது உடனே பொருட்களினதும் விலையை அதிகரிப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த விலைக்குறைப்புடன் பெற்றோல் மற்றும் டீசல் விலை குறைப்புக்கேற்ற அனைத்து சேவைகளிலும் மற்றும் பொருட்களினதும் விலைகள் குறைக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொது மக்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றன.
மலைவாஞ்ஞன்