மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங்.பொன்னையா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மவுன்ட்வேணன் கிரேக்லி இட்றேட்டன் லோகி ஆகிய தோட்டப் பகுதி ஆலயங்களுக்கும் சென்கிளையார் புனித பத்திரிசிரியார் தேவாலத்திற்கும் ஒலி பெருக்கி சாதனங்கள் சமையல் உபகரணங்கள் மற்றும் இப்பிரதேச பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கொட்டக்கலை பிரதேச சபை வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங்.பொன்னையா பொருட்களை வழங்கி வைப்பதையும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொட்டக்கலை பிரதேச அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்