மலையக நகரங்களில் இன்று எரிவாயு விநியோகம்.எரிவாயுவினை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில்……

0
170

மலையகப்பகுதியில் இன்று (27) எரிவாயு விநியோகம் இடம்பெற்றன. இந்த எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதனையும் காணக்கூடியதாக இருந்தன.
இன்று கொட்டகலை பகுதியில் எரிவாயு வர்த்தக நிலையங்களுக்கு சுமார் 40 எரிவாயு சிலிண்டர்கள் வீதம் விநியோகிக்கப்பட்டதாகவும் இதில் குறித்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர.;

குறித்த பகுதியில் அதிகமானவர்கள் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக நின்ற போதிலும் அதிகமானவர்கள் எரிவாயுயின்றி ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மலையகப்பகுதியில் கடந்த ஒரு சில வாரங்களாக எரிவாயு தட்டுப்பாடு நிலவி வந்தன. இதனால் எரிவாயு விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதுடன் எரிவாயுயின்றி மக்கள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மலையகத்தில் பல உணவகங்கள்,சிற்றூண்டிசாலைகள் மூடப்பட்டன.

இடைக்கிடையே மட்டுப்படுத்தப்பட்ட எரிவாயு விநியோகம் இடம்பெற்ற போதும் எல்லோருக்கும் தேவையான எரிவாயு பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகின. இதனால் மக்கள் நீண்டு வரிசையில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக நிற்பதனையும் காணக்கூடியதாக இருந்தன. ஒரு சில இடங்களில் எரிவாயுவினை பெற்றுக்கொள்வதற்காக போராட்டங்களும் இடம்பெற்றன.

இதே வேளை கடந்த சில தினங்களாக மலையகத்தில் உள்ள எண்ணை நிரப்பு நிலையங்களில் எண்ணை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகள் காணப்பட்ட போதிலும் இன்று அந்த நிலை காணப்படவில்லை.

குறைந்த அளவிலான வாகனங்களே எண்ணை நிரப்பு நிலையங்களில் இருந்தன.அதனால் எரிபொருள் ஒரு சில தினங்களில் வழமைக்கு திரும்பும் நடவடிக்கையே காணப்படுகின்றன.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here