நைஜீரியாவில் நடைபெற்ற Bayelsa International Film Festival விருது வழங்கும் விழாவில் “சுனாமி” திரைப்படத்தின் கல்யாணி எனும்iyaga கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை மலையக நடிகை நிரஞ்சனி சண்முகநாதன் பெற்றுள்ளார். இதனை பாராட்டி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் மற்றும் பிரஜா சக்தி நிறுவனத்தின் பணிப்பாளருமான பாரத் அருள்சாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ள நடிகை நிரஞ்சனி சண்முகநாதனுக்கு வாழ்த்துமலை குவிகின்றமை குறிப்பிடத்தக்கது.