23 தோட்டக் கம்பெனிகளின் கீழுள்ள தோட்டங்களில் 83,900 ஹெக்டயர் காணி பயன்படுத்தப்படவில்லை
என இனங் காணப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவிக்கின்றது.
பயிர்ச்செய்கை மனிதவள அபிவிருத்தி மையத்தின்
கண்காணிப்பின் கீழுள்ள 23 தோட்டக் கம்பெனிகளின் காணி தொடர்பான விவரங்களை மேற்கோள்காட்டி கணக்காய்வு அறிக்கை இதை சுட்டிக் காட்டியுள்ளது.
23 தோட்ட கம்பெனிகளின் கீழ் நிர்வாகிக்கப்படும் 241,966 ஹெக்டயார் காணியில் 83,900 ஹெக்டயர் காணி இவ்வாறு பயன்படுத்தப்படாத காணி என கண்டறியப்பட்டுள்ளது.
பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத காணிகளில் 6,993 ஹெக்டயார் நுவரெலிய
பிரதேசத்திலும், 12,723 ஹெக்டயர் பிரதேசத்திலும், 13,359 ஹெக்டயார் பதுளை மாவட்டத்திலும் காணப்படுகிறது. கண்டி மாவட்டத்தில் 15,965 ஹெகாடயரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 15,871 ஹெக்டயரும் காலி மாவட்டத்தில் 13,370 ஹெக்டயாரும், கேகாலை மாவட்டத்தில் 5,619 ஹெக்டயரும் தோட்ட கம்பெனிகளின் கீழ் நிர்வகிக்கப்படும் தோட்டங்களில் பயிர் செய்யப்படாத காணிகளாக இனம் காணப்பட்டுள்ளதென மழைக்க புதிய கிராமங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் மூலம் பெருந்தோட்ட சமூகத்துக்கு வீட்டு வசதிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தோட்டப்பகுதிகளில் பயன்பாட்டுக்கு உட்படாத நிலங்கள் தொடர்பில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு தோட்ட நிர்வாகங்களுக்கு ஜனாதிபதி ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நீண்டகாலமாக தோட்ட நிர்வாகங்களால் பராமரிக்காமல் இருக்கும் தரிசு நிலங்களை தோட்ட மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை நாடாளுமன்றிலும் இது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி தோட்டப்பகுதியில் பயன்பாடு அற்ற நிலையில் இருக்கும் இந்த நிலங்களை தோட்ட மக்களுக்கு விவசாயம் செய்வதற்காக பகிர்ந்தளிக்கவேண்டும் என்று சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.